சேலம் பள்ளப்பட்டி பகுதியில் இருக்கும் லீ பஜார் வர்த்தக சங்க வெங்காய மண்டிகளில், வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்ந்ததோடு விற்பனையும் குறைந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து லாரிகளில் வெங்காய மூட்டைகள் வரத் தொடங்கியதால், வெங்காயம் விலை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் 90 முதல் 140 ரூபாய் வரை விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது விலை குறைந்து 60 முதல் 120 ரூபாய் வரை விற்பனையானது.
அதேபோல் சின்னவெங்காயம் ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.



0 Comments