கோவை தேர்தல் பிரசாரத்தில் மாமியாரைக் கடித்த மருமகள்; தலையில் 6 தையல்கள்!

Breaking News

header ads

கோவை தேர்தல் பிரசாரத்தில் மாமியாரைக் கடித்த மருமகள்; தலையில் 6 தையல்கள்!



கோவை மாவட்டம், பொள்ளாச்சி -உடுமலை சாலையில் உள்ள மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி (62). பத்திர எழுத்தர். இவரின் மகன் சரவணக்குமார் (38). கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை சரவணக்குமார் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சரவணக்குமார் குடிப்பழக்கத்தில் அடிக்கடி குடித்துவிட்டது ஊருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி தொடர்ந்து கண்டித்ததால் சரவணக்குமார் தன் தாயார் நாகேஸ்வரி வீட்டுக்கு வந்துவிடுவார். இதன் காரணமாக, கல்பனா நாகேஸ்வரியுடன் வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

நாகேஸ்வரி
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார் மருமகளிடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி டவுன் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. நாகேஸ்வரி அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். உள்ளாட்சி தேர்தலில், சின்னாம்பாளையம் ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பணி காரணமாக, நாகேஸ்வரி மின் நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, நாகேஸ்வரியின் தலைப் பகுதியில் கல்பனா பயங்கரமாகக் கடித்துள்ளார். இதில், நாகேஸ்வரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் 6 தையல்கள் போட்டுள்ளனர். இது குறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் நாகேஸ்வரி மீண்டும் புகாரளித்துள்ளார்.


அதன் அடிப்படையில், கொலைமிரட்டல், தகாத வார்த்தையால் திட்டியது, தாக்கி காயம் ஏற்படுத்தியது ஆகிய 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கல்பனாவை கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments