போலிகளை கண்டறியவே பாஸ்போர்ட் மீது தாமரை அச்சிப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி எம்.கே ராகவன், கேரளாவில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னம் அச்சிடப்பட்ட பாஸ்போர்ட்கள் வழங்கப்படுவது காவிமயமாக்குதலின் மற்றொரு திட்டமா என, செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிகாட்டினார்.
இந்நிலையில், தேசிய மலரான தாமரை போலி பாஸ்போர்ட்களை கண்டறிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டிருப்பதாகவும், சுழற்சி அடிப்படையில் நாட்டின் பல சின்னங்களும் இதே போல் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.



0 Comments