கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தமிழ் சினிமா படமான வேட்டையாடு விளையாடு பட பாணியில் வெள்ளை வேன்களில் பெண்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க மக்களிடையே பரவும் தகவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நகரங்களில்சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கில் வெள்ளை வேன்களில் வரும் மர்மநபர்கள் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, அவர்களது உடல் உறுப்புகளை விற்று விடுவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
இதுதொடர்பாக பால்டிமோர் நகர மேயர், வெள்ளை வேன்களை கண்டால் போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு தெரிவித்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ புகார்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், உறுதிபடுத்தப்படாத தகவல்கள் பேஸ்புக்கில் வலம் வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments