தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீஷியன் பணி..!

Breaking News

header ads

தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீஷியன் பணி..!




தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியத்தில் உள்ள 1508 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Lab Technician Grade-III

காலியிடங்கள் : 1508

சம்பளம் விகதம்: ரூ.8,000 (தொகுப்பூதியம்)

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC பிரிவினர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஒரு வருட Medical Lab Technician படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: லேப் டெக்னீஷியன் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் 10, பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.300. இதர பிரிவினர்களுக்கு ரூ.600. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணபிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mrb.tn.gov என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை தெளிவாக குறிப்பிடவும். நேர்முகத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 9.12.2019.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.

Post a Comment

0 Comments