ரஜினியுடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ் : வெளியான சுவாரஸ்ய தகவல்

Breaking News

header ads

ரஜினியுடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ் : வெளியான சுவாரஸ்ய தகவல்



நடிகர் ரஜினிகாந்தின் புதிய படத்தில் அவரது  தங்கையாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்தை தொடர்ந்து  ‘தலைவர் 168’ என்று தற்போது அழைக்கப்படும் பெயரிடப்படாத படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அப்படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ரஜினியின் 2 மனைவிகளாக குஷ்பு மற்றும் மீனா  நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments