வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாணவர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்டுமோ என்ற சூழ்நிலை நிலவி வந்தது .இந்நிலையில் பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படாது என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை பயமின்றி நம்பிக்கையுடன் எழுதும் வகையில் பிரதமர் மோடி ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் வானொலி மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியைக் காண இந்தியா முழுவதும் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து நிகழ்ச்சியைக் காண ஏற்பாடு செய்யவும் மத்திய அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவதால் அன்று அரசு விடுமுறை நாளாகும்.
அன்றைய தினத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து பிரதமரின் நிகழ்ச்சியை காண வேண்டுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படாது என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் நிகழ்ச்சியை மாணவர்கள் வீடுகளில் இருந்தும் தொலைகாட்சிகள், இணையதளம் உள்ளிட்டவை மூலமாகக் காணலாம் என்றும், வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளில் காணவே ஏற்பாடு செய்ய சுற்றறிக்க அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க 16ஆம் தேதி பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவேண்டும் என்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், வீட்டிலிருந்தபடியே வாட்ஸப், ஃபேஸ்புக், தொலைக்காட்சிகளில் கேட்கலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.



0 Comments