வரலாற்றில் இன்று - டிசம்பர் 22 !

Breaking News

header ads

வரலாற்றில் இன்று - டிசம்பர் 22 !



இன்றைய முக்கிய நிகழ்வுகள் -22.12.19

Image result for தேசிய கணித தினம்
               *•┈┈•❀•┈┈•❀•┈┈•*
           *தேசிய கணித தினம்*
                *•┈┈•❀•┈┈•❀•┈┈•*
69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

401 – முதலாம் இன்னசெண்ட்திருத்தந்தையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.

880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.

1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின்மன்னராக முடிசூடினார்.

1216 – தொமினிக்கன் சபையைதிருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.

1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.

1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.

1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின்கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத்தோற்கடித்தனர்.

1849 – உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.

1869 – எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார்.[1]

1885 – இட்டோ இரோபுமி என்ற சாமுராய்சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1891 – புகைப்படம் மூலம் முதன் முதலாக '323 புரூசியா என்ற சிறுகோள்கண்டுபிடிக்கப்பட்டது.

1915 – மலேசிய இலங்கைத் தமிழரால்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

1921 – சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.

1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளைஉற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானியஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

1948 – சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.

1963 – லக்கோனியா என்ற இடச்சுக்கப்பல் போர்த்துக்கலில் மதீராவில்மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.

1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.

1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.

1978 – இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

1989 – உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.

1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

1990 – லேக் வலேசா போலந்தின்அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1990 – மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம்இருந்து விடுதலையடைந்தன.

2001 – வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானிஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.

2018 – இந்தோனேசியாவில் சுண்டா நீரிணை ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.

                 *🌺பிறப்புகள்🌺*

1183 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242)

1300 – குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329)

1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)

1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)

1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)

1887 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)

1885 – கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின், உருசிய வானியலாளர் (இ. [1946]])

1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)

1911 – குரோட் இரெபெர், கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)

1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர் (இ. 2019)

1933 – சாலினி இளந்திரையன், தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000

1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசுபெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்

1958 – ஜெயமாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

                 *😭இறப்புகள்😭*

1419 – எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்

1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)

1942 – பிராண்ஸ் போவாஸ், செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)

1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)

2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)

2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)

2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)
    *❈•┈┈•❀🍃[$]🍃❀•┈┈•❈*

Post a Comment

0 Comments