இன்ஜினியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட் : தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

Breaking News

header ads

இன்ஜினியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட் : தமிழக அரசு அதிரடி உத்தரவு..!



இன்ஜினியரிங்க் பி.இ.படிப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்து படித்தவர்களும் தமிழக அரசு பள்ளிகளில் இனி கணித ஆசிரியர் ஆகலாம் என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப்பணிகளில் சேர விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் அரசாணையில் உள்ள படிப்புகள் தவிர பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் புதிய படிப்புகளில் பட்டம் பெறுவதால் சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு பிரச்னை இருந்து வருகிறது.

இதனால் எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை வெளியிட வேண்டுமென உயர்கல்வித்துறைக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி குழுமத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதியும்,12-ம் தேதியும் நடைபெற்றது. அதில் இணையான படிப்புகளின் பட்டியல் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையேற்று எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது, எவை இணையான படிப்புகள் அல்ல என்ற விவரத்தை அரசாணையாக தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட். (B.Ed) முடித்து பின்பு ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் (TET) தேர்வினை எழுதி அரசு பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு கணித ஆசிரியராக பணியாற்றலாம் என்று புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு பி.இ படித்தவர்கள் பி.எட். (B.Ed) படிப்பதற்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு எழுத அனுமதி கிடையாது. தமிழக அரசின் புதிய அறிவிப்பின்கீழ், இனிமேல் பி.இ. படித்து இருப்போரும், பி.எட். முடித்து, டெட் தேர்வு எழுதி, அரசு பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றலாம்.

Post a Comment

0 Comments