குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சைதாப்பேட்டை சந்திப்பு பகுதியில் முதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர், பின்னர் அண்ணா சாலையில் பேரணியாக சென்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர். உதயநிதி உள்ளிட்டோர் ஏற்றப்பட்ட வாகனத்தை முன்னோக்கி செல்லாதபடி திமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.



0 Comments