இந்திய அணியில் தன்னை திணித்து கொள்வதை தோனி விரும்ப மாட்டார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஜூலையில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வில்லை.தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வருகிற ஜனவரி மாதம் வரை தோனி, அவகாசம் கோரி உள்ளார் என்றார்.
மேலும் இந்திய அணியில் தம்மை திணித்துக் கொள்வதை தோனி விரும்ப மாட்டார் என்று அவர் குறிப்பிட்டார். ஐ.பி.எல். போட்டிகளுக்கு பின்னர் தோனி முடிவு எடுக்கக் கூடும் என்று அவர் தெரிவித்தார்.



0 Comments