சில்லறை விற்பனையாளர்கள் 2 மெட்ரிக் டன் வரை மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மழைகாரணமாக உற்பத்தி குறைந்து, வெங்காயம் விலை நாடு முழுவதும் அதிகரித்ததை அடுத்து, வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க சில்லறை விற்பனையாளர்கள் 5 மெட்ரிக் டன் வரை மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
தற்போது அந்த அளவு 2 மெட்ரிக் டன்னாக குறைக்கப்படுவதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மொத்த விற்பனையாளர்கள் ஏற்கனவே உள்ளபடி 25 மெட்ரிக் டன் வரை வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்க மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.



0 Comments