உள்ளாட்சி தேர்தல் : செல்போன் பயன்படுத்த தடை .!

Breaking News

header ads

உள்ளாட்சி தேர்தல் : செல்போன் பயன்படுத்த தடை .!



தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது .உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ளதாவது , வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் கட்டளையிடுவதற்கு ஏற்ப போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளர்களையும், பிறர் உதவியின்றி நடமாட இயலாத நலிவுற்ற வாக்காளர்களையும், வரிசையில் நிற்க விடாமல் முதலில் சென்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்குள் எவரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் செல்பி எடுப்பது அல்லது வீடியோ எடுப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும், செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments