தனியார் செல்போன் நிறுவனங்களான வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை வரும் 3ம் தேதி முதல் சந்ததாதாரர் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவன வருகையை அடுத்து, போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை செல்போன் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில், செல்போன் நிறுவனங்கள் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட கணக்கை தாக்கல் செய்தன. இதையடுத்து எந்நேரமும் கட்டண உயர்வை தனியார் செல்போன் நிறுவனங்கள் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை 20 முதல் 42 சதவீதம் வரை 3ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. ஜியோவும் 6ம் தேதி முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது.



0 Comments