கேன்சர் மருந்தான இப்ருடினிப் (Ibrutinib) ன் விலை குறைந்த மாத்திரையை ஐதராபாத்தில் உள்ள நாட்கோ பார்மா அறிமுகப்படுத்தி உள்ளது.
ரத்தப் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு வகையான கேன்சர் சிகிச்சைக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. இப்ருநாட் (Ibrunat) என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மாத்திரை கேன்சர் நோயாளிகளின் சிகிச்சை செலவை கணிசமாக குறைக்கும்.
இதர மருந்து நிறுவனங்களின் மாத்திரைகளுக்கு மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், இப்ருநாட் மாத்திரைக்கான செலவு 38 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பது கேன்சர் நோயாளிகளுக்கு ஆறுதலான செய்தியாக உள்ளது.



0 Comments