குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு! ஜமாத் கூட்டமைப்பிலிருந்து அ.தி.மு.க எம்.பி அதிரடி நீக்கம்

Breaking News

header ads

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு! ஜமாத் கூட்டமைப்பிலிருந்து அ.தி.மு.க எம்.பி அதிரடி நீக்கம்



குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு! ஜமாத் கூட்டமைப்பிலிருந்து அ.தி.மு.க எம்.பி நீக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அனைத்து ஜமாத் கூட்டமைப்பிலிருந்து அ.தி.மு.க எம்.பி முகமது ஜான் நீக்கப்பட்டுள்ளார்.



பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் இஸ்லாம் மதத்தைச் சேராதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அ.தி.மு.க எம்.பிகள் 11 பேரின் ஆதரவு முக்கியமானதாக அமைந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க எம்.பி முகமது ஜான் ஜமாத் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை ஜமாத் கூட்டமைப்பு காப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை ஜமாத் உறுப்பினர்கள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமையில் முகமது ஜானின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments