குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Breaking News

header ads

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம், மறுத்துள்ளது. 

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 59 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

வழக்குகள் அனைத்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அமர்வில் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன.

அப்போது, குடியுரிமை சட்டத்தை  இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேசமயம், இந்த சட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஜனவரி 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையையும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்....

Post a Comment

0 Comments