இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர் 30 !

Breaking News

header ads

இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர் 30 !

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
                     *மார்கழி- 14*
                         *டிசம்பர்*
                      *30.12.2019*
                 *திங்கட்கிழமை*  ‌‌                  
          *🇮🇳🔎ராசி பலன்கள்🔍🇮🇳*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


*⚜️மேஷம் ராசி*


எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.


*⚜️ரிஷபம் ராசி*


கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் சுபவிரயம் ஏற்படும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கு பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : சுபவிரயம் ஏற்படும்.
ரோகிணி : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


*⚜️மிதுனம் ராசி*


பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். பொதுத்தொண்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமான உறவினர்களுக்கிடையே விரிசல்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


*⚜️கடகம் ராசி*


எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்லவும். மனதில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விலகும். புத்திரர்களிடம் கனிவுடன் பழகவும். வியாபாரம் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : முடிவுகள் காலதாமதமாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.


*⚜️சிம்மம் ராசி*

மனைகளால் இலாபம் ஏற்படும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் அமையும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.


*⚜️கன்னி ராசி*


விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். உடல் உபாதைகள் உண்டாகும். சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


*⚜️துலாம் ராசி*


தூரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக தீரும். அரசாங்கத்திடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் ஏற்படும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9 
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : ஆதாயம் உண்டாக்கும்.


*⚜️விருச்சகம் ராசி*


பழைய கடன் பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். தவறிய சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : இன்னல்கள் அகலும்.


*⚜️தனுசு ராசி*


இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை சூழல் அமையும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


*⚜️மகரம் ராசி*


எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : இலாபகரமான நாள்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.


*⚜️கும்பம் ராசி*


பணியில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தாயின் உதவியால் சேமிப்பு அதிகரிக்கும். செய்தொழிலில் உயர்வு உண்டாகும். சபைகளில் தனக்கான ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சதயம் : உயர்வு உண்டாகும்.
பூரட்டாதி : குழப்பங்கள் தோன்றும்.


*⚜️மீனம் ராசி*


அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் எழுந்த பிரச்சனைகள் குறையும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகனங்களால் விரயச் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள்அதிகரிக்கும்.
ரேவதி : விரயச் செலவுகள் ஏற்படும்.

Post a Comment

0 Comments