இன்றைய ராசி பலன் - டிசம்பர் 25 !

Breaking News

header ads

இன்றைய ராசி பலன் - டிசம்பர் 25 !



                     *மார்கழி- 09*

                         *டிசம்பர்*

                      *25.12.2019*

                    *புதன்கிழமை*  ‌‌                  

          🔎ராசி பலன்கள்🔍



*⚜️மேஷம் ராசி*


எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தொழில் சம்பந்தமான எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சினத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அஸ்வினி : உதவிகள் காலதாமதமாகும்.
பரணி : நெருக்கடிகள் நீங்கும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.



*⚜️ரிஷபம் ராசி*


குலதெய்வ வழிபாடுகளால் மனஅமைதி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : அமைதி கிடைக்கும். 
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


*⚜️மிதுனம் ராசி*


உத்தியோகம் சார்ந்த புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.


*⚜️கடகம் ராசி*


எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் கைகூடும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் விலகும். உத்தியோகம் தொடர்பான அலைச்சல்களால் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் புதிய அணுகுமுறைகளால் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : காரியங்கள் கைகூடும். 
பூசம் : தடைகள் விலகும்.
ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.


*⚜️சிம்மம் ராசி*


மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புத்திரர்களின் வழியில் வருமானம் மேம்படும். பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் குறைந்து மேன்மை உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பூரம் : வருமானம் மேம்படும். 
உத்திரம் : சூட்சமங்களை கற்பீர்கள்.


*⚜️கன்னி ராசி*


புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். தொழில் சார்ந்த புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : அன்பு அதிகரிக்கும்.
சித்திரை : அனுகூலமான தினமும்.


*⚜️துலாம் ராசி*


தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : மாற்றமான நாள். 
விசாகம் : உற்சாகம் பிறக்கும்.


*⚜️விருச்சகம் ராசி*


விலகிச்சென்ற உறவினர்களின் வருகை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : முயற்சிகள் கைகூடும்.


*⚜️தனுசு ராசி*


செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் ஆதரவால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : இலாபம் கிடைக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள். 
உத்திராடம் : அபிவிருத்தி உண்டாகும்.


*⚜️மகரம் ராசி*


குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தந்தைவழி உறவினர்களால் தனலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : தனலாபம் கிடைக்கும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : நட்பு கிடைக்கும். 


*⚜️கும்பம் ராசி*


பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொதுநலம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
சதயம் : ஆசைகள் நிறைவேறும். 
பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


*⚜️மீனம் ராசி*


வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பயணங்களால் இலாபம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.

Post a Comment

0 Comments