வலிமை படத்தின் படப்பிடிப்பில் அஜித் செய்த காரியம் .!

Breaking News

header ads

வலிமை படத்தின் படப்பிடிப்பில் அஜித் செய்த காரியம் .!



வினோத் இயக்கத்தில் ‘வலிமை’  படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது.

தற்போது அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித்துக்கும் வில்லன்களுக்கும் நடக்கும் மோதல் காட்சிகளை வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்களை வைத்து படமாக்குகின்றனர். சண்டை காட்சிகள் ஆபத்தானதாக இருந்ததால் அஜித்துக்கு பதிலாக டூப் நடிகரை பயன்படுத்த சண்டை இயக்குனர்கள் முடிவு செய்தனர்.


ஆனால் அஜித் ஏற்கவில்லை. டூப் நடிகர் இல்லாமல் ஆபத்தான சண்டை காட்சிகளில் தானே நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை போனிகபூர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளார். வெங்கட் பிரபு வில்லனாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பதை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. இலியானா, யாமிகவுதம், ரகுல்பிரீத் சிங், பரினிதி சோப்ரா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. அஜித் தோற்றம் மற்றும் படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க துணை நடிகர்-நடிகைகளும், பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments