புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் மருத்துவர்கள் : சுகாதாரத்துறை !

Breaking News

header ads

புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் மருத்துவர்கள் : சுகாதாரத்துறை !


புத்தாண்டு கொண்டாட்டத்தில் தொடர்ந்து பல உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திக் குறிப்பில், விபத்துகளை எதிர்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறையும் காவல்துறையும் இணைந்து தேவையான விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 108 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் நிறுத்தவும் விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து, உயிரைக் காக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments