நடிகை சமந்தா,திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.
மேலும் பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகை சமந்தாவுடன் ஏராளமான பக்தர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், சமந்தாவை பத்திரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.



0 Comments