வன்முறை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கான முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், தேசப்பாதுகாப்பு, நாட்டு நலனை மனதில் கொண்டு மக்கள் ஒற்றுமையுடன் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் மனத்திற்கு வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரத்தால் தீர்வு காண முடியாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


0 Comments