மத்திய அரசின் ஒப்புதலுடன் வருகிறது துருக்கி நாட்டின் வெங்காயம் !

Breaking News

header ads

மத்திய அரசின் ஒப்புதலுடன் வருகிறது துருக்கி நாட்டின் வெங்காயம் !



கடந்த மாதம் நாடு முழுவதும் பெய்த தொடர் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணாமாக வெங்காய வரத்து குறைந்து விலை மிக உயர்வு நிலையை எட்டியுள்ளது .

சாமானிய மக்கள் வாங்க இயலாத வகையில் விலை உச்சத்தை தொட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து தமிழகத்தில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்தது. அதன்படி எகிப்து நாட்டில் இருந்து முதல்கட்டமாக வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் எகிப்து வெங்காயம் தமிழக மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. எகிப்து வெங்காயத்தின் அடர்த்தியான நிறம் காரணமாக மக்கள் அதை வாங்க தயங்கினர். இந்த வெங்காயத்தால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று தமிழக அரசு விளக்கம் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது துருக்கியில் இருந்து கூடுதலாக 12 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வெங்காயம் டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியா வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments