மனைவியை துன்புறுத்திய வழக்கில் தமிழ் சீரியல் நடிகர் கைது..

Breaking News

header ads

மனைவியை துன்புறுத்திய வழக்கில் தமிழ் சீரியல் நடிகர் கைது..




மனைவியை துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், தமிழ் சீரியல் நடிகரான ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை சென்னை அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

சீரியல் நடிகர் ஈஸ்வர் தனது தாயுடன் சேர்ந்து கொண்டு, மதுபோதையில் தன்னையும், குழந்தையையும் அடித்து துன்புறுத்துவதாக, அவரது மனைவியும், சீரியல் நடிகையுமான ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



தனது கணவருக்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருந்தது குறித்து கேட்டதற்கு, தன்னை தினமும் மதுபோதையில் அடிப்பது மட்டுமின்றி, தனது குழந்தையையும் அடிப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரை அடுத்து, ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், விவகாரத்துக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரியல் நடிகர் ஈஸ்வர் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments