புலிக்கு பிறந்தது பூனையா .?-முன்னணி கிரிக்கெட் வீரர் மகன் அதிரடி.!

Breaking News

header ads

புலிக்கு பிறந்தது பூனையா .?-முன்னணி கிரிக்கெட் வீரர் மகன் அதிரடி.!



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டின் மகன் சமித், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற  மண்டல அளவிலான ஆட்டத்தில், வைஸ் பிரசிடென்ட் அணியும், தார்வாத் அணியும் மோதின. இதில் வைஸ் பிரசிடென்ட் அணி சார்பில் முதல் இன்னிங்சில் விளையாடிய சமித், 256 பந்துகளை எதிர்கொண்டு, 201 ரன்களை எடுத்தார்.

அதில் 22 பவுண்டரிகளும் அடங்கும். 2ஆவது இன்னிங்சிலும் 94 ரன்களை எடுத்த அவர், போட்டியில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.  2015ம் ஆண்டில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சமித் 3 அரைசதங்களை விளாசினார்.

Post a Comment

0 Comments