சென்னையில் தடையை மீறி பேரணி நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் திமுக சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. தடையை மீறி இந்த பேரணி நடத்தப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாக கூடுவது, தடையை மீறி போராட்டம், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரணிக்கு நிபந்தனையோடு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் எனவும் எழும்பூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



0 Comments