ஒரு கோடி பயனர்களை எட்டியது மை கவர்ன்மென்ட் !

Breaking News

header ads

ஒரு கோடி பயனர்களை எட்டியது மை கவர்ன்மென்ட் !


மத்திய அரசின் செயலியான மை கவர்ன்மெண்ட் ஆன்லைன் தளத்தில் 1 கோடி பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் ஆட்சிமுறை மற்றும் திட்டங்கள் குறித்து, தெரிவிப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு மை கவர்ன்மெண்ட் என்கிற ஆன்லைன் தளம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

 தற்போது இத்திட்டம் ஒரு கோடி பயனர்களை எட்டியுள்ள நிலையில் பிரதமரின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், இந்த தளம் கருத்துக்கள் மற்றும் நுண்ணறிவுகளுக்கான ஒரு துடிப்பான மையமாக உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல்லுக்கு வாழ்த்துக்கள் என பதிவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments