தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் அந்த மாவட்டங்களில் பொது விடுமுறை விட வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல். சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டின் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments