ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோருக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விதிமுறையுடன் கூடிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், பரப்புரைக்காக, காலை 6 மணியிலிருந்து, இரவு 10 மணி வரை மட்டுமே ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த, காவல்துறையின் முன் அனுமதி தேவை என்று கூறப்பட்டுள்ளது. அறிவுறுத்தப்பட்ட நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தினால், கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளரின் அனுமதி இருந்தாலும், தேர்தல் தொடர்பாக சுவரில் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவது கூடாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.



0 Comments