ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை..

Breaking News

header ads

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை..



ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன...



காங்கிரஸ்+   -- 38
பா.ஜ.க+     ------33
மற்றவை   ------10




ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ்-ஜே.எம்.எம்.-ஆர்.ஜே.டி கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்னடவை எதிர்கொண்டுள்ளது.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படையினர், ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்றும், யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் கூறியிருந்தன. ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் அதற்கு நேர் எதிராக மாறியிருக்கிறது.

ஜே.எம்.எம் - காங்கிரஸ் - ஆர்.ஜே.டி கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில், முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்கள் இன்றி, பின்னடவை எதிர்கொண்டுள்ளது.

இதற்கிடையே, ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட, ஆளும் பாரதிய கட்சியின் முதலமைச்சர் ரகுபர்தாஸ் முன்னிலை பெற்றிருக்கிறார். ஜே.வி.எம் நிறுவனத் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முதல் முதலமைச்சருமான பாபுலால் மராண்டி (Babulal Marandi), தன்வர்(Dhanwar) தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

ஜே.எம்.எம். கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், தாம் போட்டியிட்ட பார்ஹெய்ட (Barhait) தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். அதேவேளையில், தும்கா(Dumka) தொகுதியில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார்.

ஏஜேஎஸ்யூ தலைவர் சுதேஷ் மகதோ(Sudesh Mahto), தாம் போட்டியிட்ட சில்லித் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments