கொல்கத்தாவில் நேற்றைய தினம் 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகளும் மொத்தம் 140 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு வீரர்களை ஏலம் எடுத்தன. அதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்கள் 13 பேர் மொத்தம் 58 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் 6 பேர் 17 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் 4 பேர் 17 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ், அதிகபட்சமாக பதினைந்தரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.



0 Comments