பெருமாள் கோயில்களில் வாசம் செய்யும் துளசி சர்வரோக நிவாரணி .அத்தகைய துளசி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதால் பல நன்மைகளை பெறுகிறோம்,அவற்றை எந்தெந்த திசையில் வைத்து வளர்த்தால் சிறந்த பலன்களை பெறலாம் என்பதை இன்றைய வாஸ்து கட்டுரையில் பார்ப்போம்.
துளசியின் மகத்துவம்
துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது .
- கடுமையான காய்ச்சல் குணமடையும்
- துளசி இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள் நெருங்காது .
- பெண்கள் துளசிச்சாறு அருந்தி வர மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.
- சித்த மருத்துவத்தில் துளசி உடல் சூட்டை தணிக்கும் என்றும் கூறுகிறார்கள் .
எந்த திசையில் வளர்க்கலாம்
துளசிச்செடி என்பது இறைவனுக்கு உகந்தது என்பதால் எல்லா திசைகளும் ஏற்றது தான்.இருப்பினும் வாஸ்துப்படி பயிர் செய்தால் யோகங்களும் ,அதிர்ஷ்டங்களும் பன்மடங்காக பெருகும்.
வாயு மூலையான வடமேற்கில் துளசிச் செடியை வைத்தால் யோகம் உண்டாகும்.பெருமாளின் திருவருளால் யோகம் உண்டாகும் .ஆனால் நீர் ஊற்றி நன்று வளர்க்க வேண்டும்.துளசி செடி வைக்கும் இல்லத்தை கோவில் போன்று தூய்மையாக காக்க வேண்டும்.



0 Comments