இந்திய முழுவதும் குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் சவுரவ் கங்குலியின் மகள் சனா தனது டிவிட்டர் பக்கத்தில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் எண்ட் ஆஃப் இந்தியா என்ற நூலில் உள்ள சில வரிகளை பதிவிட்டிருந்தார்.
தான் முஸ்லிமோ, கிறிஸ்தவனோ அல்ல என்பதால் பாதுகாப்பாக உணர்பவர்கள் தாங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதை உணர வேண்டும் என்பது உள்ளிட்ட வரிகளை சனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரானது என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தனது மகள் அரசியலை புரிந்துகொள்ளும் பக்குவமற்ற சின்னஞ் சிறுமி என்று கங்குலி கூறியுள்ளார்.



0 Comments