விபத்தில் சிக்கிய இளம்தம்பதி : காப்பாற்ற போராடிய மாவட்ட ஆட்சியர் !

Breaking News

header ads

விபத்தில் சிக்கிய இளம்தம்பதி : காப்பாற்ற போராடிய மாவட்ட ஆட்சியர் !



தூத்துக்குடியில் திருமணமான 6 மாதங்களே ஆன காதல் மனைவி கண் முன்னே விபத்தில் சிக்கிய கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 



தூத்துக்குடி கணேஷ்நகரை சேர்ந்தவர் முனியசாமி என்பவரது மகன் மோகன் (வயது 24). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் ஸ்ருதி (வயது 23) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.கணவன், மனைவி இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். திருமணம் முடிந்த நிலையில் கோவில்பிள்ளை நகரில் தனது மனைவி வீட்டில் மோகன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று  இரவு கணவன் மனைவி இருவரும் பீச்சிற்கு சென்றுள்ளனர். தனது மனைவியை பீச் ரோட்டில் பைக்கில் இறக்கி விட்டு விட்டு திரும்பும் போது அவ்வழியே வந்த அரசுப்பேருந்து மோதியதில் மோகன் படுகாயம் அடைந்தார்.

விபத்தில் சிக்கியவருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதவி

அப்போது அந்த வழியே காரில் வந்த மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தனது காரிலேயே படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த‌ மோகனை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் மயங்கிய அவரது மனைவி ஸ்ருதியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Post a Comment

0 Comments