தொடரும் கனமழை : பல ஊர்களில் வெள்ளப்பெருக்கு .!

Breaking News

header ads

தொடரும் கனமழை : பல ஊர்களில் வெள்ளப்பெருக்கு .!



இலங்கையில் தற்போது  பெய்த வரும் தொடர் மழையால் பல ஊர்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மைய செய்தி தொடர்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறுகையில், கனமழையால் பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மழையால், மகாவலி கங்கை ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடுவதால், கரையோர ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளப்பெருக்கு காரணமாக பொலன்னறுவை - சோமாவத்தி சாலை மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாணிக்கக்கங்கை ஆற்றில் பெருகி ஓடும் வெள்ளத்தால், அதன் கரையில் உள்ள செல்ல கதிர்காமம் கோவில் நீரில் மூழ்கியது என்றும், 859 குடும்பங்களைச் சேர்ந்த 2,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments