நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த இரு கண்டெய்னர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கூடங்குளம் அருகிலுள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரம் கிராமத்தில் காட்டுப்பகுதியில் உள்ள அனுமன் நதி ஓடையில் கழிவுகளை கொட்டுவதற்காக வந்த அந்த லாரிகளிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதோடு, கழிவு நீரும் கசிந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் இரு கண்டெய்னர் லாரிகளையும் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த கூடங்குளம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை காவல்நிலையம் கொண்டு சென்றனர். இந்தப் பகுதியில் கேரளாவிலிருந்து வரும் லாரிகள் கோழி மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்வது தொடர்கதையாகி வருவதாக கூறும் கிராம மக்கள், இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



0 Comments