குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதே தேச துரோகம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதாரணமாக கருணை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மதவாதமாக பிரிவினைவாதமாக, தேச விரோத சக்திகள் மாற்ற முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
உலக நாயகன் எனப் பெயர் வைத்துக் கொண்டால் போதாது உலக அறிவு வேண்டும் என தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், எனவே திமுக பேரணியில் கலந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல் புத்தகம் படிக்கலாம் என கமல்ஹாசன் எண்ணியிருக்கலாம் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.



0 Comments