கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி பணம் வசூலித்த 3 பேர், வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு கண்காணிப்பாளர் சம்பத்குமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பளித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஐபிஎஸ் அதிகாரி நால்வரையும் விடுதலை செய்தது.



0 Comments