வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மூடுபனியால் விமான, ரயில் சேவைகள் பாதிப்பு..

Breaking News

header ads

வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மூடுபனியால் விமான, ரயில் சேவைகள் பாதிப்பு..



டெல்லியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக 17 ரயில்சேவைகளை ரத்து செய்யப்பட்டன. குளிர்காலத்தின் தொடக்க நாட்களிலேயே தலைநகராமான டெல்லி நடுங்க தொடங்கி உள்ளது.

இன்று காலை முதல் டெல்லியில் கடும் குளிர் நிலவியது. நகரின் பல பகுதிகளில் 'கடுமையான குளிர் நிலவுவதாக' வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் நடைபாதையில் வசிக்கும் மக்கள் அவதியுறுகின்றனர்.

இந்நிலையில் டெல்லி விமான நிலைய பகுதியில் நிலவிய பனிமூட்டத்தால் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. இதே போன்று டெல்லியிலிருந்து புறப்படும் 17 ரயில் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், வடஇந்தியாவின் பல்வேறு ஊர்களிலும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவுகிறது.

Post a Comment

0 Comments