குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று 60 மனுக்கள் மீது விசாரணை

Breaking News

header ads

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று 60 மனுக்கள் மீது விசாரணை


குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 60 மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று  விசாரிக்க உள்ளது.

திமுக ,மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லீம்களை வெளியேற்ற குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் மதரீதியாக குடியுரிமையை முடிவு செய்யக் கூடாது என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர். இந்தியாவின் அடிப்படையான மதசார்பின்மை கொள்கைக்கும் இந்த சட்டம் எதிரானது என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments