கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரம் குழந்தை பசிக்கொடுமை தாங்காமல் மண்ணை அள்ளி தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே புறம்போக்கு நிலத்தில் ஸ்ரீதேவி என்பவர் அவரது 6 குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வருகின்றனர்.அவரது கணவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் வேலை செய்யும் பணத்தை குடித்துவிட்டு மனைவி ,குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் சமையலுக்கு பணம் அளிக்காத்த காரணத்தினால் ஸ்ரீதேவியால் உணவு தாயரிக்க இயலவில்லை .எனவே பசிக்கொடுமை தாங்காமல் குழந்தை மண்ணை அல்லி தின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கின. இதனால் தன்னார்வலர்கள் ,குழந்தைகளை கண்டறிந்து உணவு வழங்கியதுடன் ,உதவி செய்துள்ளான் ஆர்.
தகவல் அறிந்த மாநில குழந்தைகள் நல ஆணையம், 4 குழந்தைகளை, காப்பகத்தில் சேர்த்து பராமரித்து வருகிறது. மற்ற 2 குழந்தைகளுக்கு தாயாரின் உதவி தேவைப்படுவதால் அவரிடம் கொடுத்துள்ளது. மேலும், தாயாரும், இரண்டு குழந்தைகளும், பெண்கள் காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டனர். தாயாருக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி, பெண்கள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் தாசில்தார் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
0 Comments