என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 பேர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்!

Breaking News

header ads

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 பேர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்!


என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரில் 2 பேர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்

ஹைதரபாதில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து எரித்ததற்காக என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர், 9 பெண்களை பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி அதிகாலை ஹைதராபாதில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரின் குற்றப் பின்னணி குறித்து உயர் மட்ட காவல்துறை குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் தெலுங்கானா-கர்நாடக எல்லைப்பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில் இந்த குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

15 பெண்கள் அப்பகுதிகளில் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் 9 பேரை தாங்கள் எரித்துக் கொன்றதாக என்கவுண்டரில் சுடப்படும் முன்பு இரண்டு பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பாலியல் தொழிலாளிகள், அரவாணிகள், மற்றும் தனியாக சிக்கிய பெண்கள் என்றும் அந்த குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவும், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான மூன்று நபர் விசாரணை ஆணையமும் இந்த என்கவுண்டர் வழக்கை விசாரித்து வருகின்றனர். 

Post a Comment

0 Comments