ரூ. 2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - முதலமைச்சர் .!

Breaking News

header ads

ரூ. 2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - முதலமைச்சர் .!



மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி  2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்காக புதிய திட்டம் ஒன்றையும் வெளியிட்டார்.

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தப்படி, ஏழை மக்களுக்கு "ஷிவ் போஜன்" என்ற பெயரில் 10 ரூபாய்க்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் முதல் கட்டமாக 50 இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

Post a Comment

0 Comments