வன்முறையில் ஈடுபட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்தார். வன்முறையைத் தூண்டியதாக வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷாத் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திர குஹா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று ரிஸ்வானும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மங்களூர் பாகல்கோட் உள்ளிட்ட இடங்களிலும் தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரவுவதைத் தடுக்க கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் மொபைல் இணைய சேவை 48 மணி நேரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.



0 Comments