வாதிரியார் சமுதாயத்தை முக்குலத்தோர் பிரிவில் இணைத்து DNT அரசாணை வெளியிடக்கோரி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
வாதிரியார் சமுதாயத்தை முக்குலத்தோரில் இணைத்து DNT சாதிச் சான்றிதழ் பெற அரசாணை வெளியிட வேண்டும், வாதிரியார் சமுதாயத்தை வேற்று சமுதாயத்துடன் இணைத்து தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மற்றும் அந்த சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியுறுப்பதாவது
கலாச்சாரம், பண்பாட்டில் மாறுபட்ட கிளை வழிக்கொன்ட தாய்வழிச் சமூகமான எங்கள் வாதிரியார் சமுதாயத்தை மாற்று சாதியில் இனைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசானை வெளியிடக்கூடாது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,தலைமை செயலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
ஆதலால் தமிழ்நாடு அரசு 6 உட்பிரிவுகளை இனைத்து அரசானை வெளியிட குழு அமைத்தது.
இந்நிலையில் அரசின் முடிவிற்கு எதிராகவும் எங்கள் வாதிரியார் சமுதாயத்தை இழிவு படுத்தும் நோக்கிலும்,தென்மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்,தேவேந்திரர் அறக்கட்டளை தங்கராஜ் ஆகியோர் வாதிரியார் சமுதாயத்தை இணைக்க அரசை வற்புறுத்தி வருகின்றனர்.ஆகவே அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போர்க்குடி சமூகமான எங்கள் வாதிரியார் சமுதாயத்தை முக்குலத்தோர் பிரிவில் இணைத்து சீர்மரபினர் DNT என ஜாதி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
தமிழக அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
என கோரிக்கை வைத்து விளாத்திக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் சென்று பார்வையிட்டு கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
பின்னர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஒரு வார காலத்திற்குள் முதலமைச்சரை சந்தித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
போராட்டக்காரர்கள் தரப்பில்
அடுத்த கட்டமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபடும் என தெரிவித்தனர்.




0 Comments