நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப் இணையதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'தர்பார் படத்தில் ‘சும்மா கிழி’ என்று எஸ்.பி.பி பாடிய பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று முன் தினம் யூடியூப்பில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல பாடல் இருப்பதால், இன்று காலை வரை ஒரு கோடியே 18 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலகில் 24 மணிநேரத்தில் அதிகம் பேர் பார்வையிட்ட பாடலின் லிரிக்கல் வீடியோ என்று சாதனையை அப்பாடல் பெற்றுள்ளது. இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.



0 Comments