ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ' தம்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும், சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்த பிறகு, கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், பேய் நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஜோதிகா, கார்த்தியுடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி என தெரிவித்தார். தனது பேச்சை முடிக்கும்போது ' லவ் யூ சூர்யா' என குறிப்பிட்டு முடித்தார்.
அம்மா, அப்பா போல அக்காவும் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை படமாக்கியுள்ளனர் என சூர்யா குறிப்பிட்டார்.
'கைதி -2 ' கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறிய நடிகர் கார்த்தி, தனக்கு லுங்கி அணிகிற கதாபாத்திரங்கள்தான் சரியாக இருக்கும் போல என கூறினார்.



0 Comments