கூடுதல் கட்டணம் வசூல் நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் இயங்கி வரும் பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள பிரச்சனைகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே , அம்மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மெட்ரிகுலேசன் இயக்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அரசு விதிகளுக்கு புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது .கூடாத வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்,
பள்ளியில் கழிப்பறை வசதி உருவாக்கி தர வேண்டும்,பள்ளியில் விளையாட்டு மைதானம் உருவாக்கித்தர வேண்டும்,மாலை நேர வகுப்பிற்கு வசூல் செய்யப்படும் கட்டணத்தை திரும்ப மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
அதேபோல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 27.11.19 ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
இதில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஷிரிநாத் ,மாவட்ட செயலாளர் ஜாய்சன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



0 Comments