கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயனண் தெரிவித்தார்.
இதையடுத்து அரசியல் கட்சி பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த குடும்பதிற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டோரிடம் ஏன் வசூலிக்க கூடாது என கேள்வி எழுப்பி, விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



0 Comments